பாடல் 22 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 22 · தாலப் பருவம்

துகில் அம்பரமாகச் சூழ்ந்த தொல்லைப்புவனம் அனைத்தினையும்துணைக்கண் கடையில் தந்து அளித்தும்துகினம் படர்ந்த வரைக்கு அரசன்மகிழும் தவத்தால் மகவாக வந்தமயிலே மா மறைநூல்வாக்கியமுந் தேர்ந்து அறியாதவடிவே! புன்னைவனக் குயிலே!எகினம் பிடியும் தொடர்ந்து நடைஇயற்கை அறியச் சிலம்பு அரற்றஎழில் பூவடி மென்மெலப் பெயரஎய்தும் கிளியே எனப் போற்றிஅகிலம் பரவும் வரராசைக்குஅரசே! தாலோ தாலேலோ!ஆல கண்டர் மருவியஅம்பிகையே தாலோ தாலேலோ!
பகிர்