பாடல் 7 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 7 · காப்புப் பருவம்
அண்டப் பரப்பு எலாம் வெடிபட முழங்(கு) உருமின்ஒலியும் மின்னான கோடும்அகிலங் குழிந்திடப் பொழி தாரை மதமும் மற்றுஆகம் கறுத்த வேகக்கொண்டல் கயத்தை வெண்கயம் அதனினும்பிரியமாக் கொண்டு உலாவும் விண்ணில்கோமகனை இந்திராணி தலைவனைச் சலசமென்குளிர் சரனை ஒத்தல் செய்வாம்தண்டத்தை வைத்த கைச் சமனையுள் வெரு(வ) அவன்தரளால் சமட்டி வென்றுதவமுனி குமாரனுக்கு அழியாத ஆயுள்தந்தவரைக் கலந்து தழுவும்வண்டைப் புனைந்த கைக் கோமளக் கோமதியைவரராசை மேவு குயிலைவாலை அம்பிகையை விணின் மேலை வானவர்பரவுமாதங்கியைக் காக்கவே!