பாடல் 8 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 8 · காப்புப் பருவம்

திங்கள் புதுக்கலை நிலாத் திரள் விரிந்து எனத்திரை விரிக்கின்ற சீரத்தெண்கடற்பள்ளியும் செம்பொன் ஆடையும்மணிஇழைத்த அணிதிகழ்மகுடமும்வெங்கதிர்க்(கு) ஆயிர மடங்(கு) ஒளி பரப்புங்கௌத்துவ மணியும் படைத்துமேதினி புரக்கும் விதி கணவர்க்கு நல்கு திருமாதுஅடி வியந்து ஏத்துவாம்தங்கச் சிலைத்தனுத் தாங்கி முப்புர நகைத்துஅழலினிற் சாம்பர் செய்தசங்கரக் கடவுள் ஒரு பங்கின் மேவிய பராசத்திமலையரசன் மனைவிஅங்கைத் தலத்தினில் எடுத்து மகிழ்வு எய்தமகளாக வந்து அவதரித்தஅன்னை கோமதி மலர்ப் புன்னையங்காமயிலை அன்புடன் காக்க என்றே!
பகிர்