பாடல் 51 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 51 · வாரானைப் பருவம்
என்று மழிவற் றொளிர்நலம் வேட்டிளஞ்சூரியர்க ளிருவருனதிணைவார் செவிப்பா லடைந்திடல்போன்றிலங்குங் குழைக ளசைந்தாடத்துன்று மணிப்பொற் கலைசிறிது துவளமலைநேர் முலைப்பொறைக்குஞ்சுரும்பு முழங்குங் கருங்கூந்தற் சுமைக்குந்தளர்சிற் றிடையெனச் சொன்மின்றுன் பதுகண் டிரங்குதலின்மிழற்றுஞ் சதங்கைப் பதம்பெயர்த்துமேலோர் வழுத்தக் கனல்வரைபோன்மிளிர்தாம் பிரத்தால் விதித்ததிருமன்று ளிறைவ ருடனாடும யிலேவருக வருகவேவரைமால் வனத்துத் திருநெல்லை வடிவேவருக வருகவே.