பாடல் 518 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 41 / 86
கபிலமுனிவரிடத்தினின்று வேள்விக்குதிரை பெறுதல்
கம்பராமாயணம் 518 · அகலிகைப் படலம்
விண்டு நீங்கினர் உடல் உகு பிறங்கல் வெண் நீறுகண்டு, துண் எனும் மனத்தினன், கபில மா முனிதன்புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன், புகழக்,'கொண்டு போதி நின் இவுளி' என்று உற்றதும் குறித்தான்.