பாடல் 36 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 36 · சப்பாணிப் பருவம்
இந்து ஆயிரத்து ஒளி பரப்பும் எழில் முகமும் அதில்இணைமான் எனத் திகழ்ந்துஇருவிழியும் விடம் உண்ட ஈசனுக்கு இன்புறஇன்னமுது உதவு பவளவாயும்நந்தாரு முத்தினை நகைத்த நகையும் கௌரநன்னிறத் திருமேனியும்நாட் கமலமலர் அனைய பொற்றாளும் உள்ளத்தில்நாடி உயர் தொண்டருக்குச்சிந்தாகுலம் தவிர்த்திட இல்லறத்தினைச்சேர்ந்த மனை மக்கள் சுற்றம்செல்வம் வாழ்நாளும் மறுமைக்கு உறுதியமோட்ச செல்வமும் தேவ நாட்டுச்சந்தானமும் வெட்க நல்கு செங்கையினால்சப்பாணி கொட்டி அருளே!தாவு விடைக் கடவுள் மேவும் ஆவுடை அம்மைசப்பாணி கொட்டி அருளே!