சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 86 · நீராடற் பருவம்
மதி மண்டலத்து வரை முட்டி மதி உடன் மருவுமறுவைத் துடைத்து விண்ணின்வாழ்கின்ற வாரணமும் இங்குள்ள வாரணமு(ம்)மருவி விளையாடல் செய்யக்கதி தங்கு கேசரியை ராசியில் கேசரிகலந்து கொண்டு உறவு கொள்ளக்ககன முடி மீது ஓங்கு பொதிய முடிமேல் நின்றுகதிர் அமரர் உலகின் உள்ளசுதை வந்து வார்த்தது என ஒழுகு வெள்ளருவிகள்தொடர்ந்து ஒரு முகம் கொண்டு கீழ்த்தொல்நிலம் மீது அசுரர் மேதையாகிய துகள்துடைத்து நல் சுத்தி செய்யும்அதிர்கின்ற தாம்பிரவர்னிப் புதிய வெள்ள நீர்அம்மை நீ ஆடி அருளே!ஆதிரையினார் மருவு மாது கோமதி தேவி போல்அம்மை நீராடி அருளே!