பாடல் 89 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 89 · நீராடற் பருவம்

நினது கணவர் தலைமீதில்நெடுநாள் இருந்த மாற்றாளாய்நெஞ்சில் நினையாதே தோய வந்தநேயம் அதனை உன்னிவனச(ம்) நீலம் முதலானமலரைத் திரைக் கையால் வாரிவணங்கும் அடியார்க்கு அருள் உதவும்மலர் மெல்லடியில் அருச்சித்துத்துனையும் சங்கத் திரள் ஓசை துதிதாய்த்துதித்துக் கங்கை மங்கைதொண்டு புரிவான் கண்டு மகிழ்வாகித்தூய உள்ளத்து இரங்கித்தனமும் மணியும் தரும் கூழைதனில்நீராடி அருளுகவே!சங்கரேசர் பாலுறை எம்தாய்நீராடி அருளுகவே!
பகிர்