சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 91 · நீராடற் பருவம்
வானத்து உருமில் பிளிறு ஒலியும்வளரு(ம்) தாலப் புழைக்கரத்துவண்டு மூசும் இரு கவுளும்வாக்கு மத ஆற்றின் ஒலியும்மீனக் கடலின் ஒலி அடக்கும்வேழக் குழாமும் கதிர்ப் புரவிமேய நிறத்தைப் பசும்புல் எனவிரும்பி விண்ணின் மேல் தாவச்சேனைத் தலைவர் ஊர்ந்து வரும்திரள் வெம்பரிகள் நிறை வீதிசிறந்து தந்த நகரம் எனச்செல்வம் மலியும் வரராசைத்தானக் கிளியே! கூழை நதிதனில்நீராடி அருளுகவே!சங்கரேசர் பாலுறை எம்தாய்நீராடி அருளுகவே!