பாடல் 34 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 34 · சப்பாணிப் பருவம்
பனி மலைக்கு அரசனும் அவன் மனைவி மேனையும்பண்ணிய தவோபலத்தால்பணிலத்தின் முத்து எனத் தோன்றி வளர் நாளில் வான்பண்ணவர்கள் நோன்பு இயற்றுமுனிவர்கள் குழாத்தோடு முக்கண் பரம்பொருள் வெண்மூரிவிடை ஊர்ந்து வந்துமுதுமறை விதிப்படி விவாகச் சடங்கினைமுடித்திடும் பொழுதில் ஆறாம்இனிய சுவை அமுதினைப் பொற்கலத்தினில் வாக்கிஇனிது ஊட்டும் இதழ் அமுது எனஇசைய மிசையும் படிக்கிட்டு ஊட்டும் இனவளைசெறிந்து ஒப்பு இலாது இகந்ததனி மலர்க் கையினால் நனிஉளம் மகிழ்ந்து நீசப்பாணி கொட்டி அருளே!தாவுடை விடைக் கடவுள் மேவும் ஆவுடைஅம்மைசப்பாணி கொட்டி அருளே!