பாடல் 37 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 37 · சப்பாணிப் பருவம்

தங்கக் கிரிசிலை வெங்கண் பணி குதைதங்கத் தழுவிய வடம் ஓர் கைச்சங்கைப் புனை முகில் அம்பு இப்புவி உயர்சந்தப் பெருரத மறை மான் ஊர்துங்கத்தவன் அரவிந்தத்தவன் உருள்துன்றக் கதிரவர் இருவோரும்தொந்தப் பட அரன் அன்று அப்புரம் அதுதுஞ்சப் பொர எழுதிறல் வாமசெங்கைத் தனு விசை அந்தக்கரமொடுசெம்பொற் கண நிறை தரு சீரம்சிந்தைக்கு இசை தரு சண்பைக் குமரர்திருந்தத் தமிழ் தர அருள்கின்றகொங்கைத் தரு வலம் மென்கைத் தளிர்கொடுகொட்டுக சப்பாணிகோமதி அம்பிகை புன்னைவனக் குயில்கொட்டுக சப்பாணி
பகிர்