பாடல் 40 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 40 · சப்பாணிப் பருவம்
செஞ்சிகை எங்கு நிரந்து பரந்துசெழுந்திசை சென்றாடச்செங்கையின் அங்கி சிவந்து கொழுந்துசினந்து சினந்தாடமஞ்சு இவருங் களம் மிஞ்சு விடம்துடிகொண்டு மலர்ந்தாடவன்பணி என்று சொலும் பணியும் புய(ம்)மண்டி மலர்ந்தாடஅஞ்சன குன்ற(ம்) மலைந்த வகிர்ந்தஅரும் துகில் மேலாடஅம்பொன் நெடுஞ்சபை நின்று நடம்புரிஅம்புயம் என் கூறும்குஞ்சித பாதரொடு ஆடு மடக்கொடிகொட்டுக சப்பாணிகோமதி அம்பிகை புன்னைவனக் குயில்கொட்டுக சப்பாணி