பாடல் 90 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 90 · நீராடற் பருவம்

முனமே கங்கைதனை முடிமேல்முக்கண் நாதர் சுமந்த பகைமுற்றாது உளத்தில் கொண்டு ஊடல்வைத்தாய் இன்று முளரி மலர்அனைய திருச்செஞ் சேவடியால்அவள்பால் நடந்து நீ தோயில்அண்ணல் உடனே ஊடல் செய்தால்அன்று நின் பாதோகம் என்றுஇனைதல் இலாது ஆதரித்து எதிர் நின்றுஎதிர் உத்தரமும் சொல்வார் என்றுஏமாப்பு அடைந்து மனக் கலக்கம்இன்று தவிர்வாள் இமையரசன்தனையையே தண் கூழை நதிதனில்நீராடி அருளுகவே!சங்கரேசர் பாலுறை எம்தாய்நீராடி அருளுகவே!
பகிர்