பாடல் 1 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 1 · காப்புப் பருவம்
திருமருவு மார்பனைக் கரியமுகில் வண்ணனைச்செந்தாமரைக் கண்ணனைத்திசைமுகன் தந்தையைத் தசரத குமாரனைத்தேந்துழாயணியலானைக்குருகுலப் பாண்டவ சகாயனை முகுந்தனைக்கூராழியங்கையானைக்கூர்மாவதாரனைப் பாற்கடன் மிசைப்பள்ளிகொண்டவனை யஞ்சலிப்பாம்அருமறைப் பொருளின்முடிவானவளை வானவர்க்கரசியைச் சடிலமுடி மீதுஅறுபதாயிர வருட மணிமுடிசுமந்துலகையாண்டவன் பங்கினாளைப்பொருநையந் துறை கமழு நெல்லைவடிவாளைப்புகழ்ந்துதொழுமன்பரகமாம்பூங்கோயிலிற்குலவு காந்திமதி தன்னைப்புரந்தருளவேண்டுமென்றே.