பாடல் 5 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 5 · காப்புப் பருவம்

புள்ளே றுயர்த்தமெய்ப் புகழே றுகைத்தகைப்புலவேறு கழுமுட் படைப்போரேறு சங்கரிக் குந்தொறும் தொன்மையிற்பொறியேறு சிறை வண்டறாக்கள்ளேறு கமலப் பொகுட்டேறும் வாழ்க்கைகொடுகவி னேறுமுல களித்துக்கலையேறு மறைமுழக் கிசையேறு திசைமுகக்கடவுண் முன் னின்று காக்கமுள்ளேறு கூவிளங் கனியினிற் கிள்ளேறுமுலையரம் பையர் களிப்பமுகிலேறு புனிதன்கை முகிலேறு சிரசின்கண்முடியேற அவுணரேறாம்வள்ளேறு சூருரத் திடியே றிடித்திடலின்வடியேறும் அயிலெறிந்தோர்மயிலேறு மிளமதலை மடியேறி விளையாடமகிழ் நெல்லை வடிவாளையே.
பகிர்