பாடல் 2 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 2 · காப்புப் பருவம்

மறுகுதொறும் விலைகள்கூறி வளையொடுசெல் வணிகராமுன்மதுரையிடைத் தோன்றியொரு வண்மையைக் காட்டினர்மதனையடும் விரதர்மேரு வரையுமொரு சிலையதாகவளைதல்செய் புராந்தகர் கையின்மழுத் தூக்கினர்வரியுழுவை உடையதோலினுடையர்மழவிடையர் வேணுவனமதனில் வேண்டவளர் கண்ணுதல் காட்சியர்மணிகொள்மர கதகலாப மயிலில்வரு குமரவேளைமதகரியை யீந்தவரரொர் மின்னெருக் காத்தியோடறுகிதழி யிறகராவெ ணிலவொளிறுநெடியவேணியமலரிரு நான்குருவ ரைம்முகத் தீர்த்தனர்அலறியரு கணுகுமேன மகிழவமர் பொருகிரீடிஅகநினைவ தாம்பகழி முன்னளித்தாட் கொள்வர்அமரர்முனிவரர்கள்பாட மறிகதற விரைவிலாடும்மணிமருவு தாம்ப்ரசபை மன்னுமெய்க் கூத்தனர்அருள்பெருகு தவளநீறு முழுதணியு மருணமேனிஅனவரதர் பூங்கழல்கள் சென்னிவைத்தேத்துவாம்இறுகுமுலை யினளைநீல நிறமுடைய கொடியைநீடும்எழுபுவியை யீன்றருளு மன்னையைச் சூற்கொண்மூஇனமுமிரு நிதியுநாண வுதவுகர மலரினாளைஇடுதிலகம் வாய்ந்தபிறை நன்னுதற் கீற்றின்மீதுஇலகுகுறு வெயர்வைதோய நடநவிலுமு மையையீடில்இமயமலை வேந்தனருள் கன்னியைத் தேக்கறாஇனியதமிழ் மதுரவாரி அமுதமுறழ் கருணையாளைஎமதறிவில் ஆர்ந்தகிளி தன்னைமட்டூற்றும்வாய்நறுமலர்கொள் குழலினாளை இருகுழையொடிகல் செய்வேலின்நயனவெழி லோங்குசிறு பெண்ணினைப் பூத்ததாநளினமல ரணையின் மீதுவளருமிரு மகளிர்பேணநகைபயிலு மாங்குயிலை விண்ணவர்க் கேற்றவூர்நடுவிலுறு சிகரிநீள மளவுகமு கொடியவாளைநனிவயலின் மேய்ந்துகடி துன்னுநற்றோ ருப்பின் மேல்நகுமணிகொ டலைகண்மோது பொருநைவரு திருநெல்வேலிநகரில்உறை காந்திமதி அம்மையைக் காக்கவே.
பகிர்