பாடல் 4 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 4 · காப்புப் பருவம்
மதிவாழ் சடைப்பரமர ருள்பா லனைச்சுடிகைமணியார்பணிப்ப கையதாமயில்வா கனத்தில்வரு முருகோனை விற்பொலியும்வயிரா யுதற்கு மெழிலார்வனசா தனத்திருவின் மணவாள னுக்குமொருமருகோனை முக்கண் வரைநேர்மதமா முகக்கடவு ளிளையோனை முத்தமிழின்வலியோனை முத்தைய னைநீர்கொதிவாரி யொத்தநிற மறமாதொ டத்திமகள்குயமீதணைத்து மகிழ்சீர்கொளுமா றிரட்டிபடு புயவேளை வெற்றிகொடுகுகுகூவெ னொப்பில் குருகேகொடியா வுயர்த்தவனை வடிவே லெடுத்தவுணர்குலவே ரறுத்த வனையோர்குறுமா முனிக்கருளு முருமா மலைக்குமரகுருநாத னைப்பணிகுவாம்அதிர்வான் முகிற்குறையு ளெனும்வேய் வனத்திலெமதனையான சத்தி தனைநீடமரா திபர்க்கருள்செய் கவுமா ரியைப்பொருவிலருள்வா ரியைப்பெ ணரசாம்அழியாத சிற்பரையை யுமையாள் தனைப்புரிசையணியா வுடுக்கு மியல்போடவிர்கோ புரத்தொகுதி யுறுகோ யிலுக்குளினிதமர்போதை யைப்போ ருநைமாநதியாளை முத்தருணர் கதியாளை யிக்கதெனநவில்வாய் மொழிக்கி ளியைநார்நலமேவு வெற்பிறைவ னதுமா தவப்பயனைநடையோதி மத்தை யிளநீர்நகுதாள மொத்திலகு முலையாளை முத்தனையநகையாளை நெய்த்த குழன்மேல்நளிர்தார்மு டித்துலவும் வடிவா யியைச்சிறிதுநலியா தளித்த ருளவே.