பாடல் 13 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 13 · செங்கீரைப் பருவம்
கனகரும மேபய னளிப்பதல் லாற்பிறிதொர்கடவுளன் றன்றென்னவேகருதுமு ளகந்தைக் கியைந்த தீ மகமொன்றுகடிதினிற் புரிவோர்கள் பாற்பனகவணை யானைமோ கினியா வரும்படிபணித்தவர்தம் நோன்பழித்தும்பகரரும் எழிற்குலவு வேடமிட் டவர்மருவுபன்னியர்த முன்ன ரேகிஅனகநிறை குன்றியணி வளைகலையு நாணுடன் அகன்றிடச் செய்து மதவேளங்கமழி யும்படி விழித்துமகிழ் வாருக்கடங்காத மயல் விளைத்துத்தினகர ரெனும்குழைக் காதொடு பொருங்கண்ணிசெங்கீரை யாடி யருளேதிருவளரு நெல்லைநகர் வடிவுடைய காந்திமதிசெங்கீரை யாடி யருளே.