பாடல் 31 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 31 · தாலப் பருவம்
காருக்கு எதிர் மயில் ஏறிப் பவனி கொள் காதற் பெறு சேயும்காதிப் பொரும் ஒரு கோடு உற்றிடு கயமாவத்திர தேவும்வார் உட்கிட வரு மேருத் தன மலர் வாய் வைத்து உண நீயும்வாலைக் குழவியதாகப் பெயர் பெறு மாயைத் திரு மாதேபட தேருட் கதிருடன் மீதிற் பொலி ஒளி போலத் தளிர் சேரும்தேன் நற்கனி தரு சூதத் திரள் பல நாரத்தைகள் ஆரத்தாருச் செறி வள ராசைப் பதி உமை தாலோ தாலேலோ!சங்கர நாரணர் பங்கில் உறுங்கிளி தாலோ தாலேலோ!