சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 32 · சப்பாணிப் பருவம்
விண் பொதிர் படத் தடவு சிகர கோபுர மிசைவெளிர்த்த துகில் கட்டு கொடிகள்விண்டுவொடு சண்டை இட்டு அந்தழல் கிரிமுடிவிருப்பினொடு காண எண்ணிமண் பொதுத் தந்தை தன் வாகன உருக் கொண்டுவானில் பறந்தது என்னவளி அசைத் திட இம்பர் மானிடர் கண் மேல் நோக்கம்வைத்து இமை இமைத்திடாதுகண் பொருந்தாத தன்மையினால் விணவர் எனக்கண்டவர் வியக்க மூன்றுகாலத்தும் அழியாத பூ கயிலை காணியாய்க்காதலுற்று உறையும் அம்மேதண் பொலியும் அம்போருகக் கரங் கொண்டு நீசப்பாணி கொட்டி அருளே!தாவுடை விடைக் கடவுள் மேவும் ஆவுடை அம்மைசப்பாணி கொட்டி அருளே!