பாடல் 6 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 6 · காப்புப் பருவம்
குலவரை குலைந்திடச் சிறையரியும் வன்றிறற்குலிசா யுதத் தடக்கைக்குரிசிலைக் கயல்விழிப் பொருசிலைக் கவினுதற்குமரி யயிராணி கொங்கைக்கலவையங் குங்குமச் சேறாடு மார்பனைக்கற்பகக் காவி நீழற்காவலனை யாயிரங் கண்ணிலகும் வண்ணமெய்க்கடவுளைக் கருதிநிற் பாம்சுலவும்வெண் டிரைமுகட் டெழுஞாயி றுச்சியிற்றோன்றலுமொ ராழி யந்தேர்த்துரகதமொ ரேழுமணி மேடையிற் செம்மணிச்சுடரொளியினாற் சிவப்பவலவனல மரல்கண்டு நகுவதென மறுகுதொறும்வளையுமிழு மணியெறிக்கும்வளமருவு நெல்லையம் பலவாணர் களிகூறும்வடிவைப் புரக்கவென்றே..