பாடல் 8 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 8 · காப்புப் பருவம்

கதிரோன் எனும்பேர ருச்சகன்மைக்கடனீர் படிந்திட் டாயிரம்பொற்கையாற் றினமுந் திறக்கும் வெள்ளிக்கதவக் கமலா லயத்துமெண்கட்பதிநா வகத்தும் வீற்றிருக்கும்பவளச் செழுந்தாட் பைங்கூந்தற்படிக நிறப்பெண் பாவைதனைப்பாவாற் பரவிப் பணிகுதுமால்குதியா மகிழ்கூ ரன்பருளக்கூட்டில் வளரும் பசுங்கிளியைக்கோலா கலங்கொண் டருமறைப்பூங்கொம்பிற் குலவுங் கோகிலத்தைமதிள் சூழ்சிகரித் திருநெல்லைவடிவை யடியார் மலத்திமிரம்மாற்ற வுதயஞ் செயுங்காந்திமதியைப் புரக்க வருகவென்றே.
பகிர்