பாடல் 14 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 14 · செங்கீரைப் பருவம்

ககனகூ டத்தினிமிர் குடுமிப் பொருப்பினைக்கனைகட லுண் மத்தி னிறுவிக்கடுவொழுகு துளையெயிற் றணிமணிப் பஃறலைக்கட்செவிய ராப் பிணித்துச்சிகரகோ வத்தனக் கவிகையன் மதிப்பச்சினத் தெழுந் தீ விடத்தைத்தேவருய் வான்சுவண வடபூ தரப்பொருசிலைக்கர னெடுத் தயிலலுந்தகரவார் பைங்குழற் றாய்நினா துள்ளஞ்சகிப்புறா தொள்வளைக்கைத்தாமரைக ளான்மிடற் றளவினிற் பெயர்வருந்தகைமைசா லமுத மாக்கிஅகனிலா வுவகைபூத் தாடும்பெணரசியினிதாடியருள் செங்கீரையேஅறம்வளர்த் தகிலம் புரந்தருளு நெல்லைவடிவாடியருள் செங்கீரையே.
பகிர்