பாடல் 18 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 18 · செங்கீரைப் பருவம்
வீசு கதிர்ப்பிறை வாணுத லிற்குறு வேர்வைதி கழ்ந்தாடமேனிசெய் பச்சொளி மாதிர மெட்டினு மேலும்வி ரிந்தாடவாசுகியைச் சிலைநாண தெனப்புனை வார்மயல் கொண்டாடமாமயி டத்துமுகாசுர னொத்த மகாரதர் திண்டாடத்தேசு பரப்பெழு மாதர் முதற்பலர் சேணிலு வந்தாடச்சேட னெளித்திட நீடகி லத்தொகை சேரவ சைந்தாடவாசு தவிர்த்தெமை யாளுடை யுத்தமி ஆடுக செங்கீரைஆய்மறை நற்றவ வேய்வன முற்றவள் ஆடுக செங்கீரை.