பாடல் 45 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 45 · முத்தப் பருவம்
நாக முத்தும் கழையின் முத்துநவில் செஞ்சாலி நல்கு முத்துநால்வாய்க் கோட்டின் உள் இருந்துதோன்றா முத்து நளிர் செய் கருமேக முத்தும் சங்கின் முத்துமேலா நினது நகை முத்தைமேய துணையாம் எனின் நூறுஆயிரத்தோர் கூறும் விளம்ப அரிது என்றுஆகமுத்தப் பருவம் உரைத்தவர்முன் உரைத்தார் அதை அறிந்தும்அடியேன் உரைக்கில் பயன் என்னாம்ஆதி சங்கரேசுரற்குமோக முத்தம் தரு ராசைமுத்தே முத்தம் தருகவே!மூல முதல் ஆறு ஆதாரமுதலே! முத்தம் தருகவே!