பாடல் 71 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 71 · அம்புலிப் பருவம்

எவ்வெவ் அண்டத்திலும் உள்ள அரி பிரமாதியாவரும் இவள் கடைக்கண்இனிய அருள் எப்பொழுது கிட்டும் என வந்து நின்றுஏத்தி எதிர் நோக்கி நிற்பார்மௌவல் அங்குழலி இவள் வா என அழைத்திடு முன்வாராது இருக்கில் உன்னைவவ்வு பணி விட்டிடுதல் போலாது உன் உயிர்கவரும் வன்பணி இரண்டு இங்கு உளஒவ்வொரு நொடிக்குள் அங்குற்ற உடல் சவட்டும்இஃது உண்மை சொன்னேன் ஓடி வந்துஉள்ளம் களித்திடச் செய்தி எனில் நின்உயிர்க்கு உறுதி உண்டு உலகத்தினில்அவ்வவர் உயிர்க்கு உயிரதாய்க் காக்கும் அன்னையோடுஅம்புலீ ஆடவாவே!அரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளோடுஅம்புலீ ஆடவாவே!
பகிர்