பாடல் 7 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 7 · காப்புப் பருவம்

செந்துவ ரிதழ்த்திரு மடந்தையைக் கிளியில்வருசித்தசனை யீன்ற தாயைத்திரையாழி தந்தபொற் கொடியினைப் பஃறலைச்சேடா தனத்தன் மோலிப்பைந்துழாய் நறுமணங் கமழ்தருஞ் சீறடிப்பாவையைப் பூவிலுயர் செம்பதுமப் பொகுட்டிலுறை நங்கையைச் செவ்வப்பழம்பொரு ளினைப் பரசுவாம்அந்தரியை யபிராம சுந்தரியை நெல்லைநகரம்பிகையை யும்ப ரரசைஅன்னநடை பயிலுமெழின் மின்னையொளிர் கிண்ணமுலையமுதை யுமையாளை நீலக்கந்தரர் விரும்பிய விருந்தினை யருந்தவர்கரங்குவித் துப்பரா வுங்கழலுடைய கவுரியைக் காந்திமதியம்மையைக்காத்தருளவே ண்டுமென்றே.
பகிர்