பாடல் 45 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 45 · முத்தப் பருவம்

ஐவாய் மானி னங்கைமுத்தும்ஆவின்எயிற்றி லவிருமுத்தும்மடல்கூ ருடும்பி லமையுமுத்து மணிமஞ்சுகநீள் கழுத்தின்முத்தும்மைவாய் முகில்கள் பெய்யுமுத்தும்வரிச்சூர் முதலை வழங்குமுத்தும்மற்றும் பலவா வகுக்குமுத்தும் மனத்தாற்சிறிதும் மதிப்பனவோமெய்வாய் கண்மூக் கொடுசெவியின்விடய மதைநீத் தவர்க்கருளும்வேய்முத் தவர் தம் வாய்முத்தம் விரும்புங்கொடியே மிகக்கருணைசெய்வாய் வினைகள் கொய்வாய்நின்றிருவாம் முத்தந் தருகவேதிகழ்சீர் நெல்லைக் கினியபசுந்தேனே முத்தந் தருகவே.
பகிர்