பாடல் 48 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 48 · முத்தப் பருவம்
வாள் தடங்கண்ணினார் மஞ்சனச் சாலையினில்ஆடிய நல்வாச நீரும்வாவி விண்பாய் திறல் வயப்பரியின் வாயினின்வழிந்திடு விலாழி நீரும்கோட்டு மா இருகவுள் கைகோச மூன்றினும்கொட்டு மத நீரு(ம்) மறைநூல்கூர்ந்து உணரும் விப்பிரர் கை கொடுத்த நிதியோடு உதவுகுளிர்நீரும் ஒன்றதாகிஓட்டறா வீதியினின் மன்னவர்கள் ஊர் இரதஉருளைகள் வழுக்க ரத்தினஒண்சிலை பதித்து ஏற்றி மேல்தடவு வளனினைபலி உகந்து இருகண் இமையாத நீள்சேட்ட வானவர் பார்த்து மகிழ்ராசை அன்னை நின்செவ்வாயின் முத்தம் அருளே!சேமநிதியாய் அடியர் காமியம் அளித்த சிவைசெவ்வாயின் முத்தம் அருளே!