பாடல் 54 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 54 · வருகைப் பருவம்

நாட்டின் நிலம் ஐந்தில் சிறந்த மருதப் பாவைதன்னை நாற்கோட்டு வேழநாகநாதன் வதுவை ஆற்ற அமரர்கள் தச்சன்நாட்டிய மணப்பந்தருக்குஈட்டு கால் என வாழை தாழை கமுகு இனம் உலவஈர்ங்கடலின் அமுது அருந்திஇருள்மணி எனத் திகழும் மேகங்கள்மேற்கட்டி என்ன மீதில் செறிதரநீட்டு சிறை மாயூரம் நாடகக் கணிகையரின்நிர்த்தமிட வண்டு பாடநிறை வளம் செறி சோலை மருவு வரராசையினில்நிமல சங்கரர் ஆடியஆட்டமோடு எதிர்ஆட வேட்ட ஆனந்தசிவகாமி அம்பிகை வருகவே!அம்போதியைப் பருகு கும்போதையன் பரவும்அன்னை கோமதி வருகவே!
பகிர்