பாடல் 55 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 55 · வருகைப் பருவம்

மோதிப் பகட்டு வாளைக் குலம் தாவிமுதுபாளை விரி தாழை காய்த்தமுப்புடைக் கனி சிதறி மேற்சென்று கமுகினை கப்பகம்முறிக்க அதில் மிடறு ஒடிந்துசோதிக் கதிர்த் தரளம் உதிர் ஒளியை மதிஎன்று சுருள் விரித்து ஆம்பல் அலரத்தொக்கிறினும் மேலவர்கள் உதவிசெய்தன்மையைத் தோற்று பொழிலிடை சிவந்ததாதில் பொலிந்த மலர் மது ஒழுகி அம்புயத்தண்தட(ம்) நிறைத்து வயலிற்சாலியுங் கன்னலும் வானுற வளர்க்க வளமேவு வரராசை தன்னில்ஆதிப் பரஞ்சுடர் ஓர் பாகத்து மருவும்ஆனந்த சிற்பரை வருகவே!அம்போதியைப் பருகு கும்போதயன் பரவும்பெயர் அன்னை கோமதி வருகவே!
பகிர்