பாடல் 56 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 56 · வருகைப் பருவம்
வந்தியரும் நன்மகப்பேறு பெற வளை கூன்மன்மத ஆதி ரதியாகமானிலத்தவர் இகழ வரு சிந்து நல் உருவம்வாய்க்க மதி இரவி கதிரும்இந்த விதம் என்று அறிகிலாப் பிறவி அந்தகரும்எழில் விழிப் பிரபை எய்தஇருமல் குட்டம் குன்மம் ஈழை காமாலைதலைவலி இருகை கால் முடக்குமுந்தை வினையான் மருந்தில் தீர்ந்திடாத நோய்முதுபேய் தொடக்கு பித்தம்உற்று நின் சந்நிதியின் முன் வந்தவர்க்குமுன் வாராது நீக்கு முதலே!அந்தியம் பிறை சூடு சிவசங்கரேசர் மகிழ்அருமறைப் பொருள் வருகவே!அம்போதியைப் பருகு கும்போதயன் பரவும்அன்னை கோமதி வருகவே!