சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 64 · அம்புலிப் பருவம்
எல்லாக் கலைக்கும் இவள் எசமாட்டி நீயும்ஈரெண் கலைக்கு உடையன் அதனில்இன்று இற்று ஓர்கலையாய்க் குறைந்து ஈற்றிலேஇரவியோடு ஒன்றி உருவ நீத்தாய்நல்லார்கள் ஆன மெய்யடியார்கள் இவள் சநிதிநாடியே கூடி வாழ்ந்தார்நாளு நீ மிருக சம்பந்தம் உற்றே இரவின்நண்ண லால் தானவன் எனப்பொல்லாத நிசிசரப் பேர் புனைந்தாய் உனை ஓர்பொருளாக மனதில் எண்ணிப்பொய்தற் சிசுக்களோடு விளையாடுபேதை ஆதலில் வா எனப் புகன்றதுஅல்லாது நீ இவட்கு ஒப்பாவையோ இவளோடுஅம்புலீ ஆடவாவே!அரிஅரனும் ஒன்றாக வரு தவம் முயன்றவளோடுஅம்புலீ ஆடவாவே!