பாடல் 27 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 27 · தாலப் பருவம்

கண்மலி தோகை மயூர முவப்பக்ககனத் திடைபரவுங்கருமஞ் சதனை வளைத்தறல்பருகக்கனலுமிழ் கட்டறுகட்டிண்மத வேழநிமிர்த்த துதிக்கைசெயிர்தெதிர் தீண்டவருந்திவிட வரவென வெருவியவிருசுடர் திசைவில கிச்செல்நீள்விண்மரு சோலையின் மந்திகள்பாய்தலின் வீழ்கனி சிந்தியதேன்வெள்ளங் கவரியின் மடிசொரிபாலொடு விரவி வியன்பொலியுந்தண்மலர் வாவிகொ ணெல்லைக் கினியவதாலோ தாலேலோசதுமறை புகழ்வேய் வனவடி வுமையேதாலோ தாலேலோ.
பகிர்