பாடல் 35 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 35 · சப்பாணிப் பருவம்

நீலமைக் குவளைமலர் மேல்வனக்காந்தள்போய்நேர்கவியு மதிசயம்போநேமியிற் கயலினஞ் சார்தல்போ லுணவுதவுநீரொரு கச்செவிலிமார்சாலமை தகையளிக ளெனுமக்க டம்மையெதிர்தழுவல்போற் பழையநூலோர்தையலார் கண்குடங் கைக்குவமை யென்பதைத்தானுணர்த் திடுமுறைமைபோன்மாலமைத் தருநிழற் கடவுண்மிக விழையுநீவழுதிமகளாகி வளர்நாண்மழலைப் பசுங்குதலை வாய்ச்சகியர் பலரோடிவந்துவந்தணைய வவர்தங்கோலமைக் கண்புதைத் தாடுமிரு கைகொண்டுகொட்டியருள் சப்பாணியேகொல்லாத விரதர்மிகு நெல்வேலி வடிவம்மைகொட்டியருள் சப்பாணியே.
பகிர்