verse 78 · Chaturagiri Arappaleeswarar Satakam · Ambalavanar Kavirayar
சதுரகிரி அறப்பளீசுர சதகம் 78 · மழைநாட் குறிப்பு
சித்திரைத் திங்கள்பதின் மூன்றுக்கு மேனல்லசீரான பரணி மழையுந்தீதிலவை காசியிற் பூரணை கழித்தபின்சேருநா ளாநா ளினில்ஒத்துவரு மழையுமவ் வானியிற் றேய்பிறையுளோங்கு மேகா தசியினிவொளிர்பரிதி வீழ்பொழுதின் மந்தாரமும்மழையுமுண்டா யிருந் தாடியில்பத்திவரு சேதியையுந் தினிலாத வாரமும்பகருமா வணி மூலநாள்பரிதியு மறைந்திடக் கனமழை பொழிந்திடப்பாரில்வெகு விளைவு முண்டாம்அத்தனே பைங்குவளை மாலையணி மார்பனாமண்ணலெம தருமை மதவேளனுதினமு மனதினினை தருசதுர கிரிவளரறப்பளீ சுர தேவனே.