verse 71 · Madurai Meenakshi Pillaitamil · Kumaraguruparar
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 71 · அம்புலிப் பருவம்
ஏடகத் தெழுதாத வேதச் சிரத்தரசிருக்குமிவள் சீறடிகணின்னிதயத் தடத்தும் பொலிந்தவர் திருவுளத்தெண்ணியன் றேகபடமாநாடகத் தைந்தொழி னடிக்கும் பிரான்றெய்வநதியொடு முடித்தல் பெற்றாய்நங்கையிவ டிருவுள மகிழ்ச்சிபெறி லிதுபோலொர்நற்றவப் பேறில்லைகாண்மாடகக் கடைதிரித் தின்னரம் பார்த்துகிர்வடிம்புதை வருமந்நலார்மகரயாழ் மழலைக்கு மரவங்க ணுண்டுகில்வழங்கக் கொழுங்கோங்குதூங்காடகப் பொற்கிழி யவிழ்க்குமது ரைதிருவொடம்புலீ யாடவாவேஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடனம்புலீ யாடவாவே.