Sundara Kandam · Akkagumaaran Vadhai Padalam · Verse 36 of 50
வாளாலே பொரல் உற்றான்; இற்று அதுமண் சேராதமுன், வயிரத் திண்தோளாலே பொர முடுகிப் புக்கு, இடைதழுவிக் கொண்டலும், உடல் முற்றும்நீள் ஆர் அயில் என மயிர் தைத்தன; மணிநெடு வால் அவன் உடல் நிமிர்வு உற்றுமீளாவகை புடை சுற்றிக்கொண்டது;பற்றிக்கொண்டனன் மேல் ஆனான்.