verse 74 · Madurai Meenakshi Pillaitamil · Kumaraguruparar
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 74 · அம்மானைப் பருவம்
கள்ளூறு கஞ்சக் கரத்தூறு சேயொளிகலப்பச் சிவப்பூறியும்கருணைப் பெருக்கூற வமுதூறு பார்வைக்கடைக்கட் கறுப்பூறியும்நள்ளூறு மறுவூ றகற்றுமுக மதியில்வெண்ணகையூறு நிலவூறியும்நற்றாரள வம்மனையொர் சிற்குணத் தினைமூன்றுநற்குணங் கதுவல் காட்டஉள்ளூறு களிதுளும் பக்குரவ ரிருவீருமுற்றிடு துவாத சாந்தத்தொருபெரு வெளிக்கே விழித்துறங் குந்தொண்டருழுவலன் பென்புருகநெக்கள்ளூற வுள்ளே கசிந்தூறு பைந்தேறலம்மானை யாடியருளேஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்ணம்மானை யாடியருளே.