verse 77 · Madurai Meenakshi Pillaitamil · Kumaraguruparar
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 77 · அம்மானைப் பருவம்
உயிரா யிருக்கின்ற சேடியரின் மலர்மீதுதித்தவ ளெதிர்த்துநின்னோடொட்டியெட் டிப்பிடித் திட்டவம் மனைதேடியோடியா டித்திரியநீபெயரா திருந்துவிளை யாடுவது கண்டெந்தைபிறைமுடி துளக்க முடிமேற்பெருகுசுர கங்கைநுரை பொங்கலம் மானையப்பெண்கொடியு மாடன்மானவெயரா மனம்புழுங் கிடுமமரர் தச்சனும்வியப்பச் செயுந்தவளமாமேடையுந் தண்டரள மாடமுந் தெண்ணிலாவீசத் திசைக்களிறெலாம்அயிரா வதத்தினை நிகர்க்குமது ரைத்தலைவியம்மானை யாடியருளேஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்ணம்மானை யாடியருளே.