verse 41 · Chaturagiri Arappaleeswarar Satakam · Ambalavanar Kavirayar

சதுரகிரி அறப்பளீசுர சதகம் 41 · அடங்காதவற்றை யடக்கு முபாயம்

கொடியபொலி யெருதையிரு மூக்கிலுங் கயிறொன்றுகோர்த்துவச விர்த்தி கொள்வார்குவலயந் தனின்மதக் களிறதனை யங்குசங்கொண்டுவச விர்த்தி கொள்வார்படியில்விட வரமைந் திரதந்தி ரத்தினாற்பற்றிசை விர்த்தி கொள்வார்பாய்பரியை நெடியகடி வாளமது கொடுநடைபழக்கிவச விர்த்தி கொள்வார்விடமுடைய துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டுவீசிவச விர்த்தி கொள்வார்மிக்கபெரி யோர்களுங் கோபத்தை யறிவால்விலக்கிவச விர்த்தி கொள்வார்அடியவர் துதிக்கவரு செந்தா மரைப்பதத்தையனே யருமை மதவேளனுதினமு மனதினினை தருசதுர கிரிவளரறப்பளீ சுர தேவனே.
Share