verse 242 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Thiruvavadhaara Padalam · Verse 63 of 138

தசரதன் அயோத்தி மீளுதல்

கம்பராமாயணம் 242 · திருவவதாரப் படலம்

செவ்வி நறும் சாந்து அளித்துத் தேர் வேந்தன்தனை நோக்கி,'இவண் நீ சேர்ந்தகவ்வை உரைத்து அருளுக' என, நிகழ்ந்தபரிசு அரசர் பிரான் கழறலோடும்,'அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும்தவனைக் கொணர்ந்து ஆங்கண் விடுப்பென், ஆன்றசெவ்வி முடியோய்!' எனலும், தேர் ஏறிச்சேனை ஒடும் அயோத்தி சேர்ந்தான்.
Share