Verse 2417 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunaniballi · Verse 11 of 11
திருநனிபள்ளி · 2.84.11
கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி என்று கருதபடுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன்இடுபறை யொன்றஅத்தர் பியன்மே லிருந்தி னிசையா லுரைத்த பனுவல்நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினைகெடுதல் ஆணை நமதே.