Verse 6826 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruveezhimizhalai Thirutthaandagam · Verse 9 of 11

திருவீழிமிழலை – திருத்தாண்டகம் · 6.51.9

கொண்டலுள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார் கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார்தண்டலையார் தலையாலங் காட்டி னுள்ளார் தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர் வலஞ்சுழியார் வைகலின்மேன் மாடத் துள்ளார்வெண்டலைமான் கைக்கொண்ட விகிர்த வேடர் வீழி மிழலையே மேவி னாரே.
Share