Verse 7026 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruadaivu Thirutthaandagam · Verse 4 of 11
திருஅடைவு – திருத்தாண்டகம் · 6.71.4
பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர் பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும் நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்உறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும் அளப்பூரோ மாம்புலியூர் ஒற்றி யூருந்துறையூருந் துவையூருந் தோழுர் தானுந் துடையூருந் தொழவிடர்கள் தொடரா வன்றே.