Verse 7772 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thirunaagaikkaaronam · Verse 11 of 11
திருநாகைக்காரோணம் · 7.46.11
பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை உடையேன்உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும் ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவுங்கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரென்றண்மயத்தால் அணிநாவ லாரூரன் சொன்ன அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே.