Paruvam 5 / 10 · Kumaraguruparar

Mutha Paruvam

முத்தப் பருவம் · Asking for a kiss

Share

பாடல்களும் பொருளும் The verses and their meaning

1 verse 42
காலத் தொடுகற் பனைகடந்தகருவூ லத்துப் பழம்பாடற்கலைமாச் செல்வர் தேடிவைத்தகடவுண் மணியே யுயிராலவாலத் துணர்வி னீர்பாய்ச்சிவளர்ப்பார்க் கொளிபூத் தருள்பழுத்தமலர்க்கற் பகமே யெழுதாச்சொன்மழலை ததும்பு பசுங்குதலைச்சோலைக் கிளியே யுயிர்த்துணையாந்தோன்றாத் துணைக்கோர் துணையாகித்துவாத சாந்தப் பெருவெளியிற்றுரியங் கடந்த பரநாதமூலத் தலத்து முளைத்தமுழுமுதலே முத்தந் தருகவேமுக்கட் சுடர்க்கு விருந்திடுமும்முலையாய் முத்தந் தருகவே.
Word meanings, reflection and sharing
2 verse 43
உருகி யுருகி நெக்குநெக்குளுடைந்து கசிந்திட் டசும்பூறும்உழுவ லன்பிற் பழவடியாருள்ளத் தடத்தி லூற்றெடுத்துப்பெருகு பரமா னந்த வெள்ளப்பெருக்கே சிறியேம் பெற்றபெரும்பேறே யூறு நறைக்கூந்தற்பிடியே கொடிநுண் ணுசுப்பொசியவருகுங் குமக்குன் றிரண்டேந்துமலர்ப்பூங் கொம்பே தீங்குழலின்மதுரங் கனிந்த பசுங்குதலைமழலை யரும்பச் சேதாம்பன்முருகு விரியுஞ் செங்கனிவாய்முத்தந் தருக முத்தமேமுக்கட் சுடர்க்கு விருந்திடுமும்முலையாய் முத்தந் தருகவே.
Word meanings, reflection and sharing
3 verse 44
கொழுதி மதர்வண் டுழக்குகுழற்கோதைக் குடைந்த கொண்டலுநின்குதலைக் கிளிமென் மொழிக்குடைந்தகுறுங்கட் கரும்புங் கூன்பிறைக்கோடுழத பொலன்சீ றடிக்குடைந்தசெந்தா மரையும் பசுங்கழுத்துக்குடைந்த கமஞ்சூற் சங்குமொழுகொளிய கமுகு மழகுதொய்யில்எழுது தடந்தோட் குடைந்ததடம்பணையும் பணைமென் முலைக்குடைந்தஇணைமா மருப்புந் தருமுத்துன்டிருமுத் தொவ்வா விகபரங்கள்முழுதுந் தருவாய் நின்கனிவாய்முத்தந் தருக முத்தமேமுக்கட் சுடர்க்கு விருந்திடுமும்முலையாய் முத்தந் தருகவே.
Word meanings, reflection and sharing
4 verse 45
மத்த மதமாக் கவுட்டொருநான்மருப்புப் பொருப்பு மிசைப்பொலிந்தவானத் தரசு கோயில்வளர்சிந்தா மணியும் வடபுலத்தார்நத்தம் வளர வளகையர்கோனகரில் வளரும் வான்மணியும்நளினப் பொகுட்டில் வீற்றிருக்குநங்கை மனைக்கோர் விளக்கமெனப்பைத்த சுடிகைப் படப்பாயற்பதுமநாபன் மார்பில்வளர்பரிதி மணியு மெமக்கம்மைபணியல் வாழி வேயீன்றமுத்த முகுந்த நின்கனிவாய்முத்தந் தருக முத்தமேமுக்கட் சுடர்க்கு விருந்திடுமும்முலையாய்முத்தந் தருகவே.
Word meanings, reflection and sharing
5 verse 46
கோடுங் குவடும் பொருதரங்கக்குமரித் துறையிற் படுமுத்தும்கொற்கைத் துறையிற் றுறைவாணர்குளிக்குஞ் சலாபக் குவான்முத்தும்ஆடும் பெருந்தண் டுறைப்பொருநையாற்றிற் படுதெண் ணிலாமுத்தும்அந்தண் பொதியத் தடஞ்சாரலருவி சொரியுங் குளிர்முத்தும்வாடுங் கொடிநுண் ணுசுப்பொசியமடவ மகளி ருடனாடும்வண்டற் றுறைக்கு வைத்துநெய்த்துமணந்தாழ் நறுமென் புகைப்படலம்மூடுங் குழலாய் நின்கனிவாய்முத்தந் தருக முத்தமேமுக்கட் சுடர்க்கு விருந்திடுமும்முலையாய் முத்தந் தருகவே.
Word meanings, reflection and sharing
6 verse 47
பைவைத்த துத்திப் பரூஉச்சுடிகை முன்றிற்பசுங்கொடி யுடுக்கை கிழியப்பாயிருட் படலங் கிழித்தெழு சுடர்ப்பரிதிபரிதிக் கொடிஞ்சி மான்றேர்மொய்வைத்த கொய்யுளை வயப்புரவி வாய்ச்செல்லமுட்கோல் பிடித்து நெடுவான்முற்றத்தை யிருள்பட விழுங்குந் துகிற்கொடிமுனைக்கணை வடிம்பு நக்காமைவைத்த செஞ்சிலையு மம்புலியு மோடநெடுவான்மீன் மணந்து கந்தவடவரை முகந்தநின் வயக்கொடி யெனப்பொலியுமஞ்சிவர் வளாக நொச்சித்தெய்வத் தமிழ்க்கூட றழையத் தழைத்தவடிருப்பவள முத்த மருளேசேல்வைத்த வொண்கொடியை வலம்வைத்த பெண்கொடிதிருப்பவள முத்த மருளே.
Word meanings, reflection and sharing
7 verse 48
பின்னற் றிறைக்கடன் மதுக்குட மறத்தேக்குபெய்முகிற் காருடலம் வெண்பிறைமதிக் கூன்குயக் கைக்கடைஞ ரொடுபுடைபெயர்ந்திடை நுடங்க வொல்குமின்னற் றடித்துக் கரும்பொற்றொடிக்கடைசிமெல்லியர் வெரீஇப் பெயரவான்மீன்கணம் வெருக்கொள்ள வெடிவரால் குதிகொள்ளும்விட்புலம் விளை புலமெனக்கன்னற் பெருங்காடு கற்பகக் காட்டுவளர்கடவுண்மா கவளங் கொளக்காமதே னுவுநின்று கடைவாய் குதட்டக்கதிர்க்குலை முதிர்ந்து விளையுஞ்செந்நெற் படப்பைமது ரைப்பதி புரப்பவடிருப்பவள முத்த மருளேசேல்வைத்த வொண்கொடியை வலம்வைத்த பெண்கொடிதிருப்பவள முத்த மருளே.
Word meanings, reflection and sharing
8 verse 49
சங்கோ லிடுங்கடற் றானைக்கு வெந்நிடுதராபதிகண் முன்றிறூர்த்ததமனியக் குப்பையுந் திசைமுதல்வர் தடமுடித்தாமமுந் தலைம யங்கக்கொங்கோ லிடுங்கைக் கொடுங்கோ லொடுந்திரிகுறும்பன் கொடிச்சுறவு நின்கொற்றப் பதாகைக் குழாத்தினொடு மிரசதக்குன்றினுஞ் சென்று லாவப்பொன்கோல வேலைப் புறத்தினொ டகத்தினிமிர்போராழி பரிதி யிரதப்பொங்காழி மற்றப் பொருப்பாழி யிற்றிரிபுலம்பப் புலம்பு செய்யச்செங்கோ றிருத்திய முடிச்செழியர் கோமகடிருப்பவள முத்த மருளேசேல்வைத்த வொண்கொடியை வலம்வைத்த பெண்கொடிதிருப்பவள முத்த மருளே.
Word meanings, reflection and sharing
9 verse 50
பருவரை முதுபல வடியினி னெடுநிலநெக்ககு டக்கனியிற்படுநறை படுநிறை கடமுடை படுவகடுப்பவு வட்டெழவும்விரிதலை முதலொடு விளைபுல முலையவுழக்கிய முட்சுறவின்விசையினின் வழிநறை மிடறொடி கமுகின்விழுக்குலை நெக்குகவும்கரையெறி புணரியி னிருமடி பெருகுதடத்தும டுத்தமடக்களிறொடு பிளிறிய விகலிய முகிலினிரட்டியி ரட்டியமும்முரசதிர் கடிநகர் மதுரையில் வளர்கிளிமுத்தம ளித்தருளேமுழுதுல குடையதொர் கவுரியர் குலமணிமுத்தம ளித்தருளே.
Word meanings, reflection and sharing
10 verse 51
புதையிருள் கிழிதர வெழுதரு பரிதிவளைத்தக டற்புவியிற்பொதுவற வடிமைசெய் திடும்வழி யடியர்பொருட்டலர் வட்டணையிற்றதைமலர் பொதுளிய களியளி குமிறுகுழற்றிரு வைத்தவளச்சததள முளரியின் வனிதையை யுதவுகடைக்கண்ம டப்பிடியேபதுமமொ டொழுகொளி வளையுநி னளினமுகத்துகி டற்றுமுறப்பனிமிதி யொடுசுவை யமுதமு நுதலொடுசொற்குத லைக்கணிறீஇமுதுதமி ழுததியில் வருமொரு திருமகன்முத்தம ளித்தருளேமுழுதுல குடையதொர் கவுரியர் குலமணிமுத்தம ளித்தருளே.
Word meanings, reflection and sharing