Verse 7035 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvalanjjuzhiyum Thirukkottaiyoorkkodeeccharamum · Verse 1 of 10
திருவலஞ்சுழியும் – திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் · 6.73.1
கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய் கல்லால நிழற்கீ ழிருந்தான் கண்டாய்பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய் பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.