verse 7750 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 352 of 363
கும்பகருணன் காலினால் குன்றினை எடுத்து வீச இராமன் கைவிதிர்த்தல்
கம்பராமாயணம் 7750 · கும்பகருணன் வதைப் படலம்
பாதம் கைகேளாடு இழந்தவன்,படியிடை இருந்து, தன் பகுவாயால்காதம் நீளிய மலைகளைக் கடித்துஇறுத்து எடுத்து, வெங்கனல் பொங்கி,மீது மீதுதன் அகத்து எழு காற்றினால்விசைகொடு திசை செல்லஊத ஊதப்பட்டு, உலந்தன வானரம்உருமின் வீழ் உயிர் என்ன.