verse 7749 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 351 of 363
கம்பராமாயணம் 7749 · கும்பகருணன் வதைப் படலம்
கை இரண்டொடு கால்களும்துணிந்தன; கருவரை பொருவும் தன்மெய் இரண்டு நூறாயிரம் பகழியால்வெரிந் உறத் தொளை போய,செய்ய கண்பொழி தீச் சிகைஇருமடி சிறந்தது; தெழிப்போடுபெய்யும் வானிடை இடியினும்பெருத்தது; வளர்ந்தது, பெருஞ்சீற்றம்.